1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : திங்கள், 28 ஜூன் 2021 (07:54 IST)

சென்னையில் விடிய விடிய மழை: பொதுமக்கள் குஷி!

சென்னையில் வெப்பச் சலனம் காரணமாக நேற்று நள்ளிரவு முதல் விடிய விடிய மழை பெய்து கொண்டிருப்பது பொது மக்களுக்கு மகிழ்ச்சியை அளித்துள்ளது 
 
கடந்த சில மாதங்களாக சென்னை மக்கள் வெப்பத்தில் காய்ந்த நிலையில் மழை எப்போது பெய்யும் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. அவ்வப்போது மழை பெய்தாலும் நேற்று நள்ளிரவு முதல் இன்று காலை வரை விடிய விடிய மழை பெய்து கொண்டிருப்பது சென்னை மக்களுக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது 
 
சென்னை மட்டுமின்றி சென்னை புறநகர் மற்றும் சுற்று வட்டாரங்களிலும் மழை பெய்து வருகிறது. சென்னையில் உள்ள சென்னை தியாகராய நகர், கிண்டி, மீனம்பாக்கம், தாம்பரம், வேளச்சேரி, தேனாம்பேட்டை, அண்ணாசாலை, கேகே நகர், ராமாபுரம், வளசரவாக்கம், போரூர், வடபழனி, கோயம்பேடு, அம்பத்தூர், அண்ணா நகர், கொளத்தூர், மாதவரம், வில்லிவாக்கம், சோழிங்கநல்லூர், பூந்தமல்லி ஆகிய பகுதிகளில் மழை கனமழை மற்றும் மிதமான மழை பெய்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் பொன்னேரி, அரக்கோணம் மற்றும் சுற்றுவட்டார இடங்களிலும் சாரல் மழை தற்போது பெய்து வருவதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன