செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: புதன், 23 நவம்பர் 2022 (11:19 IST)

தாளாளர் பாலியல் தொல்லை: வீதிக்கு வந்து போராடிய ஏஞ்சல் மெட்ரிகுலேசன் பள்ளி மாணவிகள்!

தாளாளர் பாலியல் தொல்லை: வீதிக்கு வந்து போராடிய ஏஞ்சல் மெட்ரிகுலேசன் பள்ளி மாணவிகள்!
சென்னை ஏஞ்சல்ஸ் பள்ளி தாளாளர் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததை அடுத்து மாணவ மாணவிகள் வீதிக்கு வந்து திடீரென போராட்டம் நடத்தி வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
சென்னை திருநின்றவூர் ஏஞ்சல்ஸ் மெட்ரிகுலேஷன் பள்ளி தாளாளர் வினோத் என்பவர் அப்பள்ளியில் படித்துக்கொண்டிருக்கும் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது 
 
இந்த நிலையில் பாலியல் தொல்லை கொடுத்த தாளாளர் வினோத்தை கைது செய்ய வலியுறுத்தி திடீரென 300க்கும் மேற்பட்ட இளைஞர் மெட்ரிகுலேஷன் பள்ளி மாணவ மாணவிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
 
இது குறித்து காவல் துறையினர் போராடி வரும் மாணவ மாணவிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. இதனை அடுத்து பாலியல் தொல்லை புகாருக்கு ஆளான வினோத் கைது செய்யப்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
Edited by Mahendran