தொடர்புடைய செய்திகள்
- கல்லூரி விழாவில் பாகிஸ்தான் வாழ்க கோஷம்.. கர்நாடக கல்லூரி மாணவி மீது வழக்கு
- வி.டி. சாவர்கரை விமர்சித்த ராகுல்காந்தி மீது போலீஸார் வழக்குப் பதிவு
- தலித்திய அறிஞர் ஆனந்த் டெல்டும்டேவுக்கு பிணை - எல்கர் பரிஷத் வழக்கில் உயர் நீதிமன்றம் வழங்கியது
- சிறுத்தை தோலை மஞ்சல் பூசி காயவைத்த முன்னாள் கவுன்சிலர்...வனத்துறை வழக்குப் பதிவு
- தமிழக அரசு வேடிக்கை பார்த்தால் ரயில் மறியல் போராட்டம்: கே பாலகிருஷ்ணன்
ப்ரியா வழக்கில் மருத்துவர்கள் கைது செய்யப்பட்டால் போராட்டம்: டாக்டர்கள் சங்கம் அறிவிப்பு
வீராங்கனை பிரியா வழக்கில் மருத்துவர்கள் கைது செய்யப்பட்டால் போராட்டம் நடத்துவோம் என அரசு டாக்டர்கள் சங்கம் அறிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சென்னையை சேர்ந்த கால்பந்தாட்ட வீராங்கனை பிரியாவுக்கு தவறான சிகிச்சை அளித்ததன் காரணமாக அவர் உயிரிழந்தார் என கூறப்பட்டது. இதனால் அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் மீது 304ஏ என்ற பிரிவின் படி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில் மருத்துவர்கள் முன் ஜாமீன் கேட்டு மனுத்தாக்கல் செய்த நிலையில் அந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது. மேலும் மருத்துவர்கள் உடனடியாக சரணடைய நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
இந்த நிலையில் கால்பந்தாட்ட வீராங்கனை பிரியா வழக்கில் மருத்துவர்கள் மீது பதிவு செய்யப்பட்ட 304ஏ என்ற பிரிவு மாற்றப்பட வேண்டும் என்றும் மீறி மருத்துவர்கள் கைது செய்யப்பட்டால் போராட்டம் நடத்துவோம் என்றும் அரசு டாக்டர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
Edited by Mahendran
அடுத்த கட்டுரையில்
