வெள்ளி, 20 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : புதன், 23 நவம்பர் 2022 (08:24 IST)

கனமழை எச்சரிக்கை எதிரொலி: இந்த ஒரு மாவட்டத்தில் பள்ளிகள் விடுமுறை!

schools
சென்னை திருவள்ளூர் மற்றும் ராணிப்பேட்டை ஆகிய மூன்று மாவட்டங்களில் இன்னும் மூன்று மணி நேரத்தில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்தது என்பதை பார்த்தோம். 
 
இந்த நிலையில் கனமழை அறிவிப்பு காரணமாக ராணிப்பேட்டையில் உள்ள பள்ளி கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். 
 
வானிலை ஆய்வு மையம் இன்று ராணிப்பேட்டையில் கனமழை பெய்யும் என்று அறிவித்ததை அடுத்து பாதுகாப்பு கருதி இன்று டு இன்று பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது
 
இதேபோல் சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்ட நிர்வாகத்திடம் இருந்து அறிவிப்பு வெளிவருமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்
 
Edited by Siva