1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Chennai school split students sort by caste

சென்னை அரசு பள்ளியில் சாதி வாரியாக மாணவர்கள் பிரிப்பு – வலுக்கும் கண்டனங்கள்!

Tamilnadu
சென்னையில் அரசு பள்ளி ஒன்றில் மாணவர்கள் சாதிவாரியாக பிரிக்கப்பட்டதாக வெளியான செய்தி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி வருகின்றது.

தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளிலும் மாணவர்களின் பெயர்கள் பதிவேட்டில் அகரவரிசைப்படி வரிசைப்படுத்தப்படுவதே வழக்கமாக உள்ளது. இந்நிலையில் சென்னை எம்.ஜி.ஆர் நகரில் உள்ள மாநகராட்சி தொடக்க பள்ளியில் மாணவர்கள் சாதி வாரியாக பிரிக்கப்பட்டதாக வெளியாகியுள்ள செய்திக்கு பெரும் கண்டனங்கள் எழுந்துள்ளன.

கடந்த பல ஆண்டுகளாக பதிவேட்டில் சாதிவாரியாகவே வரிசைப்படுத்தப்படுவதாக கூறப்படும் நிலையில் இதுகுறித்து விசாரணை மேற்கொள்ள மாநகராட்சி இணை ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.
About Writer
Prasanth Karthick
அடுத்த கட்டுரையில்
மரம் சாய்ந்து பலியான பெண் காவலர்: ரூ.10 லட்சம் நிவாரணம் அறிவிப்பு!