1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: செவ்வாய், 2 நவம்பர் 2021 (10:12 IST)

தீபாவளி விடுமுறை: சென்னையை விட்டு நகர துவங்கிய மக்கள்!

தீபாவளிக்கு தொடர்ந்து நான்கு நாட்கள் விடுமுறை என்பதால் மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்லத் துவங்கியுள்ளனர். 

 
தமிழகம் முழுவதும் நவம்பர் 4 ஆம் தேதி தீபாவளி கொண்டாடப்படும் நிலையில் தமிழக அரசு நவம்பர் 4 ஆம் தேதி வியாழக்கிழமை அரசு விடுமுறையாக அறிவித்திருந்தது. தீபாவளிக்கு அடுத்த நாளான வெள்ளிக்கிழமையும் விடுமுறை நாளாக தமிழக அரசு அறிவித்தது. 
 
மேலும் நவம்பர் 5 ஆம் தேதி வழங்கப்படும் இந்த விடுமுறைக்கு ஈடாக நவம்பர் 20 சனிக்கிழமை அன்று அரசு அலுவலகங்கள் வேலை நாள் என்றும் தமிழக அரசு அறிவித்தது. தீபாவளிக்கு தொடர்ந்து நான்கு நாட்கள் விடுமுறை என்பதால் மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்லத் துவங்கியுள்ளனர். 
 
தீபாவளி பண்டிகைக்கான சிறப்பு பேருந்துகள் இயக்கம் நேற்று தொடங்கிய நிலையில் சென்னையில் இருந்து நேற்று 2,488 பேருந்துகளில் 89,932 பேர் சொந்த ஊர்களுக்கு பயணம் செய்துள்ளனர். இதில் நாளை வரை பயணிப்பதற்காக 70,000 பேர் முன்பதிவு செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.