வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : வெள்ளி, 27 ஜனவரி 2023 (08:01 IST)

பழனி முருகன் கோயில் குடமுழுக்கு விழா: அமைச்சர் சேகர் பாபு வருகை

sekhar babu
இன்று பழனி முருகன் கோவிலில் குடமுழுக்கு விழா நடைபெற இருப்பதை அடுத்து அமைச்சர் சேகர்பாபு அவர்கள் அதில் கலந்து கொண்டிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளன. 
 
ஜனவரி 27ஆம் தேதி பழனி முருகன் கோவிலில் குடமுழுக்கு விழா நடைபெறும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது என்பதை பார்த்தோம். இந்த விழாவுக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக சிறப்பு பேருந்துகள் மற்றும் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு இருந்தன என்பது குறிப்பிடத்தக்கது. 
 
நேற்று இரவு முதலே ஆயிரக்கணக்கான பக்தர்கள் பழனியில் குவிந்து வருவதால் பழனியில் போதுமான பாதுகாப்பு நடவடிக்கைகளை காவல்துறை அதிகாரிகள் எடுத்துள்ளனர். இந்த நிலையில் பழனி முருகன் கோயில் குடமுழுக்கு விழாவில் கலந்து கொள்ள தமிழக இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் சேகர் பாபு அவர்கள் சற்றுமுன் வருகை தந்துள்ளார்.
 
Edited by Siva