திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : வியாழன், 26 ஜனவரி 2023 (19:14 IST)

சிகரெட் வாங்குவதில் தகராறு.. தமிழ் தொழிலாளர்களை தாக்கிய வட மாநிலத்தவர்கள்!

attack
சிகரெட் வாங்குவதில் தகராறு.. தமிழ் தொழிலாளர்களை தாக்கிய வட மாநிலத்தவர்கள்!
சிகரெட் வாங்குவதில் ஏற்பட்ட தகராறு காரணமாக திருப்பூரில் தமிழ் தொழிலாளர்களை வடமாநில தொழிலாளர்கள் தாக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
 
கடந்த சில வருடங்களாக வட மாநில இளைஞர்கள் தமிழகத்தை நோக்கி வேலை தேடி வந்து கொண்டிருக்கின்றனர் என்பதும் வடமாநிலத்தவர்களின் மக்கள் தொகை தமிழகத்தில் அதிகரித்து வருகிறது என்றதும் குறிப்பிடத்தக்கது. 
 
இந்த நிலையில் திருப்பூரில் தமிழ் தொழிலாளர்களை வட மாநில தொழிலாளர்கள் கூட்டமாக தாக்கும் பரபரப்பு வீடியோ இணையத்தில் வெளியாகி வைரல் ஆகி வருகிறது. சிகரெட் வாங்குவதில் ஏற்பட்ட பிரச்சனையில் தமிழ் தொழிலாளர்கள் வட மாநில தொழிலாளரை தாக்கிய நிலையில் அவர்கள் பதிலுக்கு தாக்குதல் நடத்தி உள்ளதாக கூறப்படுகிறது.
 
Edited by Siva