1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. chennai people line for low rate tomato

மலிவு விலையில் தக்காளி வாங்க நீண்ட வரிசையில் காத்திருக்கும் பொதுமக்கள்..!

சென்னை
சென்னையில் மலிவு விலை தக்காளி வாங்க நீண்ட வரிசையில் பொதுமக்கள் காத்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளன. 
 
தமிழகம் முழுவதும் சில்லறை விற்பனையில் ஒரு கிலோ தக்காளி ரூ.200க்கு மேல் விற்பனையாகி வருவதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர் 
 
இந்த நிலையில் பொதுமக்களின் சிரமத்தை குறைக்க மலிவு விலையில் அரசு சார்பில் தக்காளி விற்பனை செய்யப்பட்டு வருகிறது. பண்ணை பசுமை கடைகள் மற்றும் 500 ரேஷன் கடைகளில் 60 ரூபாய்க்கு ஒரு கிலோ தக்காளி விற்பனை செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 
 
இந்த மலிவு விலை தற்காலியை வாங்குவதற்காக சென்னையில் நீண்ட வரிசையில் பொதுமக்கள் காத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளன.  இந்த நிலையில் மலிவு விலை தக்காளி விற்பனை செய்யும் நிலையங்களை அதிகரிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்
 
 
Edited by Mahendran
அடுத்த கட்டுரையில்
திமுக நடைப்பயணம் சென்றால் என் மகன், என் பேரன் என்று சொல்வார்கள்: அண்ணாமலை