திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : செவ்வாய், 1 ஆகஸ்ட் 2023 (09:43 IST)

திமுக நடைப்பயணம் சென்றால் என் மகன், என் பேரன் என்று சொல்வார்கள்: அண்ணாமலை

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தற்போது நடை பயணம் செய்து வருகிறார் என்பதும் அதில் என் மண் என் மக்கள் என்ற தலைப்பில் இன்று நடை பயணம் நடைபெற்று வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில்  சிவகங்கை மண்ணில் நடைபயணத்தை ஆரம்பித்த அண்ணாமலை பேசியபோது ’மக்களை சந்தித்து பிரதமர் அவர்களின் 9 ஆண்டுகால சாதனைகளை கூறும் போது நமது பயணத்தின் பெயர் என் மண் என் மக்கள் என்று அறிவித்துள்ளோம் 
 
 இதன் மூலம் பயன் அடைந்த இளைஞர்கள் பெண்கள் விவசாயிகள் தொழில் முனைவோர் என கோடி கணக்கான நம்முடன் இருக்கின்றனர். ஆனால் திமுக ஒரு நடைபயணம் சென்றால் அதன் பெயர் என் மகன் என் பேரன் என்பதாகத்தான் இருக்கும் என்று தெரிவித்துள்ளார் 
 
மேலும் சிறையில் இருக்கும் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு மாதம் சம்பளம் கொடுத்து ஊழலுக்கு ஆதரவாக திமுக செயல் பட்டு வருகிறது என்றும் அவர் கூறினார்
 
Edited by Siva