ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : செவ்வாய், 1 ஆகஸ்ட் 2023 (07:28 IST)

அதிகாலையில் நடந்த என்கவுண்டர்.. சென்னை அருகே 2 ரவுடிகள் சுட்டுக்கொலை..!

சென்னை அருகே அதிகாலையில் இரண்டு ரவுடிகள் சுட்டு என்கவுண்டர் செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.  
 
சென்னை தாம்பரத்தை அடுத்த ஊரப்பாக்கம் என்ற பகுதியில் இன்று போலீசார் வாகன சோதையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த நிலையில் திடீரென அதிவேகமாக ஒரு கார் சென்றதை பார்த்தனர். 
 
இதனை அடுத்து அந்த காரை விரட்டி பிடித்த போலீசார் அதில் நான்கு ரவுடிகள் பயங்கர ஆயுதங்களுடன் இருந்ததாகவும் அவர்கள் போலீசாரை தாக்க முயற்சித்துக்காகவும் கூறப்படுகிறது. 
 
இதனை அடுத்து போலீசார் திருப்பி தாக்கியதாகவும் ஒரு கட்டத்தில் துப்பாக்கியால் சுட்டதால் இரண்டு ரவுடிகள் கொல்லப்பட்டனர் என்றும் கூறப்படுகிறது. கொல்லப்பட்ட இருவர் மீதும் கொலை கொள்ளை அடிதடி மிரட்டி மிரட்டல் உள்ளிட்ட பல வழக்குகள் நிலுவையில் இருந்தது பெரிய வந்தது. மேலும் காயங்களுடன் மேலும் இரு ரவுடிகள் கைது செய்யப்பட்டனர்,.
 
இந்த சம்பவத்தில் உதவி காவல் ஆய்வாளர் ஒருவர் காயமடைந்ததாகவும் அவர் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.
 
Edited by Siva