தொடர்புடைய செய்திகள்
- 12 தமிழக மீனவர்களுக்கு விடுதலை – இலங்கை நீதிமன்றம் உத்தரவு!
- கஞ்சா கடத்தல்; சட்டம் ஒழுங்கு கெட்டுவிட்டது..! – வெளிநடப்பு செய்த எடப்பாடியார் கண்டனம்!
- ஒரே நாளில் 3 மடங்காக உயர்ந்த கொரோனா பாதிப்பு: வேலூர் மாவட்ட மக்கள் அதிர்ச்சி!
- பொங்கல் சிறப்பு பேருந்துகள்; 60 ஆயிரம் பேர் முன்பதிவு! – திட்டமிட்டபடி இயங்குமா?
- 50 ஆயிரத்தை தாண்டியது தினசரி பாதிப்பு – இந்தியாவை மிரட்டும் கொரோனா!
சென்னை எம்.ஐ.டியில் 46 மாணவர்களுக்கு கொரோனா! – கல்வி நிறுவனம் மூடல்!
சென்னையில் கொரோனா தீவிரமடைந்து வரும் நிலையில் எம்.ஐ.டி மாணவர்கள் 46 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் கொரோனா பாதிப்புகள் வேகமாக அதிகரித்துள்ள நிலையில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகின்றன. முக்கியமாக தலைநகர் சென்னையில் பாதிப்பு எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருகிறது. ஆயிரத்திற்கும் அதிகமான தெருக்களில் கொரோனா உறுதியாகியுள்ள நிலையில் பொதுமக்கள் கடற்கரை உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் சென்னை குரோம்பேட்டையில் உள்ள எம்.ஐ.டி கல்வி நிறுவனத்தில் உள்ள மாணவர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. 1417 மாணவர்களுக்கு கொரோனா சோதனை மேற்கொள்ளப்பட்டதில் 46 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இதனால் எம்.ஐ.டி கல்வி நிறுவனம் ஒரு வாரத்திற்கு மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அடுத்த கட்டுரையில்
