செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: புதன், 5 ஜனவரி 2022 (10:50 IST)

பொங்கல் சிறப்பு பேருந்துகள்; 60 ஆயிரம் பேர் முன்பதிவு! – திட்டமிட்டபடி இயங்குமா?

பொங்கல் சிறப்பு பேருந்துகளில் 60 ஆயிரம் பேர் முன்பதிவு செய்துள்ள நிலையில் திட்டமிட்டபடி பேருந்துகள் இயங்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

ஜனவரி 14ம் தேதி முதல் மூன்று நாட்களுக்கு தமிழகத்தில் பொங்கல் பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. பொங்கலை முன்னிட்டு பலரும் தங்கள் சொத்த ஊர் செல்ல முக்கிய நகரங்களில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என தமிழக போக்குவரத்து கழகம் அறிவித்திருந்தது.

அதன்படி கடந்த டிசம்பர் மாதம் 10ம் தேதி முதல் பொங்கல் சிறப்பு பேருந்துகளுக்கு முன்பதிவு நடந்த நிலையில் மொத்தம் 60 ஆயிரம் பேர் சொந்த ஊர்களுக்கு செல்ல முன்பதிவு செய்துள்ளனர். இதற்காக 1,200 பேருந்துகள் இயக்க வேண்டியது உள்ளது. தற்போது தமிழகத்தில் ஒமிக்ரான் பாதிப்புகள் காரணமாக கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் பேருந்தில் 50 சதவீத அனுமதி அளிக்கப்பட்டால் முன்பதிவு செய்தவர்களுக்கு பேருந்தை இயக்குவதில் சிக்கல் ஏற்படும். முன்பதிவு செய்தபடியே பயணிக்க அனுமதி அளிக்கப்படுமா? திட்டமிட்டபடி பேருந்துகள் இயங்குமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.