1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Chennai meteorological center says about rain

சென்னை உள்பட 4 மாவட்டங்களில் இடியுடன் மழை: வானிலை எச்சரிக்கை..!

Rain
சென்னை உள்பட நான்கு மாவட்டங்களில் இன்று இடியுடன் கூடிய மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 
 
அடுத்த மூன்று மணி நேரத்தில் சென்னை உள்பட நான்கு மாவட்டங்களில் கன மழை பெய்யும் என சற்றுமுன் வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவித்துள்ளது. 
 
நேற்று இரவு முதல் சென்னை உள்பட தமிழகத்தின் பல பகுதிகளில் மிதமான மழை முதல் கனமழை பெய்து வருகிறது. இன்று அதிகாலை முதல் சென்னையின் பல இடங்களில் மழை பெய்தது 
 
இந்த நிலையில் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய நான்கு மாவட்டங்களில் இடியுடன் கூடிய மிதமான மழை முதல் கன மழை வரை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 
 
இருப்பினும் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை குறித்த எந்த அறிவிப்பு வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Siva
அடுத்த கட்டுரையில்
கிளாம்பாக்கம் பஸ் ஸ்டாண்ட் - ரயில்வே ஸ்டேஷன்: தி.நகர் போல் நடைமேம்பாலம் அமைக்க திட்டம்..!