செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : புதன், 23 ஆகஸ்ட் 2023 (12:03 IST)

தீபாவளி பண்டிகை.. சென்னை தீவுத்திடலில் பட்டாசு விற்பனை தொடங்கும் தேதி அறிவிப்பு..!

crackers
வரும் நவம்பர் 12ஆம் தேதி நாடு முழுவதும் தீபாவளி பண்டிகையை கொண்டாட இருக்கும் நிலையில் சென்னை தீவு திடலில் பட்டாசு விற்பனை தொடங்கும் தேதி குறித்து அறிவிப்பு வெளியாகி உள்ளது.  
 
ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னை தீவு திடலில் பட்டாசு கடைகள் அமைக்கப்படும் என்றும் பொதுமக்கள் பட்டாசுகளை ஏராளமாக இங்கு வந்து வாங்கி செல்வார்கள் என்பதும் தெரிந்ததே. 
 
இந்த நிலையில் வரும் நவம்பர் 12ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடயிருக்கும் நிலையில் சென்னை தீவுத்திடலில் அக்டோபர் 29ஆம் தேதி முதல் நவம்பர் 12ஆம் தேதி வரை பட்டாசு விற்கப்படும் என தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம் தெரிவித்துள்ளது.
 
மேலும் சென்னை தீவுத்திடலில் பட்டாசு விற்பனைக்காக 55 கடைகள் அமைக்கப்பட்ட உள்ளன என்றும் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம் தெரிவித்துள்ளது.
 
Edited by Siva