வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: புதன், 23 ஆகஸ்ட் 2023 (13:08 IST)

அனல் மின்நிலையங்கள் மூடல்; சென்னை உயர்நீதிமன்றத்தின் எதிர்பார்ப்பு விரைவில் நிறைவேற வேண்டும்! ராமதாஸ்

‘அனல் மின்நிலையங்களும், அணுமின்நிலையங்களும் மூடப்படும் நாளை இயற்கை ஆர்வலர்களும், இந்த நீதிமன்றமும் ஆவலுடன் எதிர்பார்க்கின்றனர் ‘ என்று பாமக முன்னாள் தலைவர் மற்றும் மருத்துவர்  ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இதுபற்றி அவர் தன் சமூகவலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:

‘’அனல் மின்நிலையங்களும், அணுமின்நிலையங்களும் மூடப்படும் நாளை இயற்கை ஆர்வலர்களும், இந்த நீதிமன்றமும் ஆவலுடன் எதிர்பார்க்கின்றனர்.

காவிரி ஆறு மீது சூரியஒளி மின் தகடுகளை அமைத்தால் என்.எல்.சி அளவுக்கு மின்சாரத்தை தயாரித்து விட முடியும் என்று சென்னை உயர்நீதிமன்றம் கூறியிருக்கிறது.

இயற்கை மீதான சென்னை உயர்நீதிமன்றத்தின் அக்கறை எங்களைப் போன்ற இயற்கை ஆர்வலர்களின் நம்பிக்கைக்கு வலு சேர்க்கிறது. உயர்நீதிமன்றத்தின் எதிர்பார்ப்பு விரைவில் நிறைவேற வேண்டும்!’’ என்று தெரிவித்துள்ளார்.