தொடர்புடைய செய்திகள்
- நிலவுக்கும் மனிதனை அனுப்புவதே இந்தியாவின் அடுத்த இலக்கு: பிரதமர் மோடி
- ரோஹித்துக்குப் பிறகு ஸ்ரேயாஸ்தான் கேப்டனாக வரவேண்டும்… ஆப்கன் வீரர் கருத்து!
- ஐபிஎல் தொடர் முடிந்துவிட்டால் அதை மறந்துவிடுங்கள்… ரசிகர்களுக்கு அஸ்வின் கோரிக்கை!
- உலகக் கோப்பை தொடரை இலவசமாகக் காணலாம்… அறிவித்த பிரபல ஓடிடி!
- சந்திரயான்-3: நிலாவில் விக்ரம் லேண்டர் 14 நாள்கள் என்ன செய்யும்?
மழையால் கைவிடப்பட்ட மூன்றாவது டி 20 போட்டி … தொடரை வென்ற இந்தியா!
இந்திய அணி அயர்லாந்து அணிக்கு எதிராக மூன்று டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதல் இரண்டு டி 20 போட்டிகளை இந்திய அணி வென்று தொடரை 2-0 என்ற கணக்கில் வென்றுள்ளது. முதல் போட்டி மழையால் பாதிக்கப்பட டக்வொர்த் லூயிஸ் விதிப்படி இந்தியா வென்றது.
இந்நிலையில் நேற்று டப்ளின் நகரில் மூன்றாவது டி 20 போட்டி நடக்க இருந்த நிலையில் மழைக் குறுக்கிட்டதால் ஒரு பந்து கூட வீச முடியாத நிலையில் போட்டி கைவிடப்பட்டது.
இதனால் இந்திய அணி 2-0 என்ற கணக்கில் தொடரை வென்றது. இந்திய அணி அடுத்து ஆசியக் கோப்பை தொடரில் விளையாட உள்ள நிலையில் இந்த தொடர் இளம் வீரர்களுக்கு நல்ல பயிற்சியாக அமைந்தது.
அடுத்த கட்டுரையில்