தொடர்புடைய செய்திகள்
- குட்கா, பான் மசாலா மீதான தடை நீக்கம்! – சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!
- தங்கம் விலை இன்று திடீர் சரிவு... மேலும் குறையுமா?
- ஜனவரி 26 குடியரசு தினத்தன்று சென்னை புறநகர் ரயில் அட்டவணையில் மாற்றம்!
- சர்ச்சை கருத்துகள் கூறிய சித்த மருத்துவர் ஷர்மிகாவிடம் விசாரணை!
- பாலியல் அத்துமீறலில் கல்லூரி முதல்வர்.. சென்னை கல்லூரி மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டம்
தமிழகத்தில் இன்று எந்தெந்த மாவட்டங்களுக்கு மழைக்கு வாய்ப்பு? வானிலை அறிவிப்பு!
தமிழகத்தில் இன்று எந்தெந்த மாவட்டங்களில் மழை பெய்யும் என்பது குறித்த வானிலை அறிவிப்பை சென்னை வானிலை ஆய்வு மையம் சற்று முன் வெளியிட்டுள்ளது.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை முடிவு பெற்ற போதிலும் காற்று திசை வேகம் மாறுபாடு காரணமாக ஒரு சில இடங்களில் மழை பெய்து வருகிறது. அந்த வகையில் இன்று மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் லேசான மழை பெய்யும் என்றும் நாளை முதல் 29ஆம் தேதி வரை தமிழக கடற்கரையோர மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்கள், புதுவை ,காரைக்கால் ஆகிய பகுதிகளில் லேசான மற்றும் மிதமான மழை பெய்யும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னையை பொருத்தவரை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்பட்டாலும் மழைக்கு வாய்ப்பு இல்லை என்றும் அதிகபட்ச வெப்பநிலை 30 டிகிரி வரை இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
Edited by Mahendran
அடுத்த கட்டுரையில்
