திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: புதன், 25 ஜனவரி 2023 (14:25 IST)

குட்கா, பான் மசாலா மீதான தடை நீக்கம்! – சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

Gudka
தமிழ்நாட்டில் குட்கா, பான் பொருட்களுக்கு விதிக்கப்பட்டிருந்த தடை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ்நாட்டில் குட்கா, பான் மசாலா உள்ளிட்ட புகையிலை பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில், தடையை மீறி தமிழ்நாட்டிற்கு கடத்தப்படும் புகையிலை பொருட்களை போலீசார் கைப்பற்றி பறிமுதல் செய்ததுடன், கடத்திய நபர்கள், விற்றவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கைகள் மேற்கொண்டு வந்தனர்.

இந்நிலையில் இதுதொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று நடந்த வழக்கில் உத்தரவிட்ட நீதிபதிகள், புகையிலை பொருட்களுக்கு முழு தடை விதிக்க உணவு பாதுகாப்பு மற்றும் தரச்சட்டத்தில் வழிவகை இல்லை என கூறி குட்கா, பான் மசாலா ஆகிய புகையிலைப் பொருட்களுக்கு விதிக்கப்பட்டிருந்த தடையை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளனர்.

இந்த உத்தரவிற்கு சமூக வலைதளங்களில் பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இதனால் இளைஞர்கள் புகையிலை பொருட்களுக்கு அடிமையாகும் நிலை ஏற்படலாம் என அவர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

Edit By Prasanth.K