1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Chennai Meteorological center says about rain

அடுத்த 3 மணி நேரத்தில் சென்னை உள்பட எங்கெல்லாம் மழை பெய்யும்?

rain
வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் சென்னை உள்பட தமிழகத்தின் பல பகுதிகளில் கடந்த சில நாட்களாக மிதமான மழை முதல் கனமழை பெய்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம் 
 
இந்த நிலையில் தற்போது வங்க கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் தோன்றி உள்ளது. இதனால் அடுத்த மூன்று மணி நேரத்தில் சென்னை உள்பட பல பகுதிகளில் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது 
 
குறிப்பாக காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கன்னியாகுமரி, திருவள்ளூர், சென்னை, திருவண்ணாமலை, நாகப்பட்டினம், மயிலாடுதுறை, நெல்லை ஆகிய 9 மாவட்டங்களில் அடுத்த மூன்று மணி நேரத்திற்கு மிதமான மழை பெய்யும் என்றும் கூறப்படுகிறது
 
மேலும் அடுத்த மூன்று மணி நேரத்தில் திருவொற்றியூர், வாலாஜாபாத்,  திருக்கழுகுன்றம், அமைந்தக்கரை, அயனாவரம், எழும்பூர், மதுரவாயல், மாம்பலம், பூவிருந்தவல்லி, பொன்னேரி, ஸ்ரீபெரும்புதூர், உத்திரமேரூர், அம்பத்தூர் ஆகிய பகுதிகளில் மிதமான மழை வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது
 
 
Edited by Siva
அடுத்த கட்டுரையில்
பாஜக இரட்டை என்ஜின் ஆட்சி நடத்துகிறது: பிரியங்கா விமர்சனம்