திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated : திங்கள், 7 நவம்பர் 2022 (08:08 IST)

5வது வந்தே பாரத் ரயில்.. இன்று சென்னையில் சோதனை ஓட்டம்!

vandhe
இந்தியாவில் ஏற்கனவே நான்கு வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட்டு வரும் நிலையில் ஐந்தாவது வந்தே பாரத் ரயிலின் சோதனை ஓட்டம் இன்று சென்னையில் நடைபெற இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன 
 
இந்தியாவில் அதிவேக ரயில் சேவையான வந்தே பாரத் ரயில் சேவை சமீபத்தில் தொடங்கப்பட்டது என்பது தெரிந்ததே. இந்த நிலையில் சென்னையில் இருந்து பெங்களூர் வழியாக மைசூர் செல்லும் ஐந்தாவது வந்தே பாரத் ரயில் சேவை விரைவில் தொடங்கப்பட உள்ளன. இதனை அடுத்து இந்த ரயிலுக்கான சோதனை ஓட்டம் இன்று சென்னையில் நடைபெறுகிறது 
 
பிரதமர் மோடி வரும் 11ம் தேதி சென்னை - மைசூர் வந்தே பாரத் ரயில் சேவையை  தொடங்கி வைக்க உள்ளார். இதனையடுத்து சென்னை சென்ட்ரலில் இருந்து வந்தே பாரத் ரயிலின் சோதனை ஓட்டம் தொடங்கப்பட்டது. இந்த சோதனை வெற்றிகரமாக நடத்த உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன
 
சென்னையில் இருந்து பெங்களூர் வழியாக மைசூர் செல்லும் இந்த ரயில் பொதுமக்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. விரைவில் இந்த ரயிலுக்கான கட்டணம் குறித்து அறிவிப்பு வெளியாக உள்ளது
 
Edited by Siva