1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Chennai meteorological center says about rain

சென்னையில் 24 மணி நேரத்தில் கனமழை: வானிலை எச்சரிக்கை!

meteorological
சென்னையில் அடுத்த 24 மணி நேரத்தில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 
 
வளிமண்டலத்தில் ஏற்பட்ட கீழடுக்கு சுழற்சி மற்றும் வங்கக்கடலில் ஏற்பட்ட காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக கடந்த சில நாட்களாக சென்னை உள்பட தமிழகத்தின் பெரும் பகுதிகளில் மிதமான மழை முதல் கனமழை பெய்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம்
 
அந்த வகையில் இன்னும் 24 மணி நேரத்தில் சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் நகரின் ஒரு பகுதி ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது
 
ஏற்கனவே சென்னையில் இருந்து சொந்த ஊர்களுக்கு பொதுமக்கள் தீபாவளி கொண்டாட புறப்பட்டுக் கொண்டிருக்கும் நிலையில் கனமழை பெய்யும் என்ற அறிவிப்பு பொது மக்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது மற்றும் பள்ளி
 
Edited by Mahendran
அடுத்த கட்டுரையில்
தமிழகத்தில் துணைவேந்தர் பதவி ரூ. 50 கோடிக்கு விற்பனை! முன்னாள் ஆளுநர் அதிர்ச்சித் தகவல்!!