1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Drug case prisoner suicide at Chennai

போதைப்பொருள் வழக்கில் கைதானவர் 3வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை: சென்னையில் பரபரப்பு!

suicide
போதைப்பொருள் வழக்கில் கைதான விசாரணைக் கைதி திடீர் என விசாரணை நடக்கும் கட்டிடத்தின் 3வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது 
 
திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்த ராயப்ப ராஜூ என்பவர் 48 கிலோ போதை பொருள் வைத்திருந்ததாக கைது செய்யப்பட்டார். அவரை கைது செய்த மத்திய போதை பொருள் தடுப்பு பிரிவு தங்களது அலுவலகத்தில் வைத்து விசாரணை செய்தனர் 
 
மூன்றாவது மாடியில் இந்த விசாரணை நடந்து கொண்டிருந்த போது திடீரென 13வது மாடியில் இருந்து ராயப்ப ராஜூ கீழே குதித்து விட்டார். இதனையடுத்து அவர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சைப் பலனின்றி அவர் உயிரிழந்துவிட்டார் 
 
போதைப்பொருள் தடுப்பு பிரிவு அலுவலகத்தில் விசாரணை செய்யப்பட்ட விசாரணை திடீரென தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
 
Edited by Mahendran
About Writer
Mahendran
அடுத்த கட்டுரையில்
இதுவரை 1,65,000 பயணிகள் சொந்த ஊர்களுக்கு பயணம்!