1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Today gold and silver rate at chennai

எகிறிய தங்கம் & வெள்ளி விலை!

சென்னை
தீபாவளி பண்டிகையால் இன்று தங்கம் மற்றும் வெள்ளி விலை சென்னையில் உயர்ந்துள்ளது.


தங்கம் மற்றும் வெள்ளி விலை கடந்த சில மாதங்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்து வரும் நிலையில் இன்று தங்கம் மற்றும் வெள்ளி விலை சென்னையில் உயர்ந்துள்ளது. இன்றைய விலை குறித்த தகவலைப் பார்ப்போம்.

தீபாவளி பண்டிகையை நெருங்கியுள்ளதால் பொதுவாகவே நகை வாங்குவது அதிகரித்துள்ள நிலையில் இதற்கு ஏற்ப தங்கத்தின் விலையும் உயர்ந்துள்ளது. சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.600 அதிகரித்து ரூ.37,920க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆபரணத் தங்கம் விலை கிராமுக்கு ரூ.75 உயர்ந்து ரூ.4,740க்கு விற்பனை ஆகிறது.

மேலும், சென்னையில் ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.1.70 உயர்ந்து ரூ.63.20க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
அடுத்த கட்டுரையில்
மாநில அரசுகள் சார்பில் தொலைகாட்சி ஒளிபரப்ப மத்திய அரசு தடை: கல்வி தொலைக்காட்சி என்ன ஆகும்?