1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Chennai meteorological center says about rain

தமிழகத்தில் 3 நாட்களுக்கு மழை நிலவரம்: சென்னை வானிலை ஆய்வு மையம்!

தமிழகம்
தமிழகத்தில் 3 நாட்களுக்கு மழை நிலவரம் எப்படி இருக்கும் என்பது குறித்து வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது
 
தமிழகத்தில் கடந்த நவம்பர் டிசம்பர் மற்றும் ஜனவரி களில் நல்ல மழை பெய்து வந்த நிலையில் அடுத்த 3 நாட்களுக்கு வறண்ட வானிலையே இருக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது 
 
பிப்ரவரி 3ஆம் தேதி முதல் பிப்ரவரி 5ஆம் தேதி வரை தமிழகம் புதுவை பகுதிகளில் வறண்ட வானிலை நிலவும் என்றும் பிப்ரவரி 6ஆம் தேதி முதல் பிப்ரவரி 7ஆம் தேதி வரை வட கடலோர தமிழகம் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் மட்டும் லேசான மழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது
 
சென்னையை பொருத்தவரை அடுத்த இரண்டு நாட்களுக்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றாலும் மழை இருக்காது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது
 
 
About Writer
Mahendran
அடுத்த கட்டுரையில்
விரைவில் அதிமுக நமது கைக்கு வரும்: சசிகலா சூளுரை