சென்னைப் புத்தகக் கண்காட்சிக்கு அரசு அனுமதி |
சென்னை புத்தக கண்காட்சிக்கு தமிழக அரசு அனுமதி அளித்துள்ளதாக சற்றுமுன் தகவல் வெளிவந்துள்ளது.
கொரோனா வைரஸ் மற்றும் ஒமிக்ரான் வைரஸ் காரணமாக சென்னை புத்தக கண்காட்சிக்கு தமிழக அரசு அனுமதி மறுத்தது என்ற செய்தியை ஏற்கனவே பார்த்தோம். இந்த நிலையில் சென்னை புத்தக கண்காட்சிக்கு அனுமதி அளிக்க வேண்டும் என பபாசி அமைப்பு தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அவர்களை சந்தித்து நேரில் வேண்டுகோள் விடுத்தது என்பதும் மருத்துவ நிபுணர்கள் உடன் கலந்து ஆலோசித்து இது குறித்து முடிவு எடுப்பதாக முதலமைச்சர் கூறியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் சென்னையில் பிப்ரவரி 16ஆம் தேதி முதல் மார்ச் 6ஆம் தேதிக்குள் புத்தக கண்காட்சியை நடத்த அனுமதி வழங்கி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது
கொரோனா சூழலில் நிறுத்தி வைக்கப்பட்ட புத்தக கண்காட்சியை மீண்டும் நடத்த தமிழக அரசு அனுமதி அளித்துள்ளதை அடுத்து தமிழக அரசுக்கு புத்தக பதிப்பாளர்கள் தங்களது நன்றியை தெரிவித்துள்ளனர்.