1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: வியாழன், 3 பிப்ரவரி 2022 (10:03 IST)

அறிஞர் அண்ணா நினைவு தினம் - அரசியல் தலைவர்கள் மரியாதை!

அண்ணாதுரையின் நினைவு தினத்தை முன்னிட்டு அண்ணா சதுக்கத்தில் உள்ள நினைவிடம் வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது. 

 
திராவிட முன்னேற்றக் கழகத்தின் நிறுவனரும் முன்னாள் முதல்வருமான அண்ணாதுரையின் நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதனால் அண்ணா சதுக்கத்தில் உள்ள நினைவிடம் வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது. அரசியல் கட்சி தலைவர்களும் மக்களுக்கும் அண்ணாவிற்கு மரியாதை செலுத்தி வருகின்றனர். 
 
முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆள் உயர மலர் வளையம் வைத்து மலர் தூவி மரியாதை செலுத்தினார். அப்போது திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன், அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் உள்ளிட்ட திரளானோர் அண்ணாவிற்கு மரியாதை செலுத்தினர். 
 
இதன் பின்னர் மலர்வளையம் வைத்து ஓ.பி.எஸ்., ஈ.பி.எஸ். உடன் அதிமுக நிர்வாகிகளும் அண்ணாவுக்கு மரியாதை செலுத்தினர். சென்னை ராயப்பேட்டையில் உள்ள தலைமை கழக அலுவலகத்தில் அண்ணாவின் படத்திற்கு டிடிவி தினகரன் மலர்தூவி மரியாதை செய்தார்.