1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. arul kumar denied the complaint on collector

நான் மெசேஜ் அனுப்பல!.. இது அரசியல் சதி!.. தவெக எம்.எல்.ஏ அருள் விக்னேஷ் மறுப்பு...

arul vignesh
2026 சட்டமன்றத் தேர்தலில் கள்ளக்குறிச்சி தனி சட்டமன்ற தொகுதியில் தவெக சார்பாக விசில் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் அருள் விக்னேஷ். இவர் கள்ளக்குறிச்சி மாவட்ட பெண் ஆட்சியர் பத்மஜாவுக்கு வாட்ஸ் அப்பில் ஆபாச குறுஞ்செய்தி அனுப்பியதாகவும், கலெக்டரின் வீட்டுக்கு நேரில் சென்று தொல்லை கொடுத்ததாகவும் திமுக எம்பி கனிமொழி சமீபத்தில் செய்தியாளர்களிடம் பரபரப்பு குற்றம் சாட்டினார்.

இது தொடர்பாக செய்தியாளர்களிடம் கருத்து தெரிவித்த அமைச்சர் ராஜ்மோகன் ‘இது தொடர்பாக மாவட்ட கலெக்டர் புகார் அளித்தால் தவெக எம்.எல்.ஏ மீது நடவடிக்கை எடுக்கப்படும்’ எனக் கூறியிருந்தார்..

இந்நிலையில், கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் பத்மஜாவுக்கு தான் எந்த ஆபாச குறுஞ்செய்தியும் அனுப்பவில்லை என தவெக எம்.எல்.ஏ அருல் விக்னேஷ் மறுப்பு தெரிவித்திருக்கிறார். கள்ளக்குறிச்சி பேருந்து நிலையம் அருகே ரியல் எஸ்டேட் முறைகேடு குறித்து முதலமைச்சரிடம் புகாரளித்தேன்.. எனவே எதிர்கட்சியினர் என் மீதும், தவெக மீதும் களங்கம் கற்பிக்க இப்படி அவதூறு பரப்புகிறார்கள்.. அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்’ என அவர் கூறியிருக்கிறார்..
About Writer
மகேந்திரன்
14 ஆண்டுகள் பல்வேறு இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் உள்ளவர். அரசியல், விளையாட்டு, பொழுதுபோக்கு, ஆன்மிகம், தொழில்நுட்ப செய்திகள் எழுதுவதில் அனுபவம் உள்ளவர்..... Read More
அடுத்த கட்டுரையில்
தீபாவளிக்கு ரூ.441 கோடிக்கு சரக்கடித்த மது பிரியர்கள்!....