1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Chennai highcourt order about TET exam

TNTET தேர்வில் தேர்ச்சி பெறாதவர்கள் ஆசிரியர் பணியில் நீடிக்க தகுதியில்லை: சென்னை உயர்நீதிமன்றம்

teacher
ஆசிரியர் தகுதித் தேர்வான TNTET  தேர்வில் தேர்ச்சி பெறாதவர்கள் ஆசிரியர் பணியில் நீடிக்க தகுதி இல்லை என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்தது ஆசிரியர் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
12 ஆண்டுகள் கடந்தும் தகுதி பெறாத ஆசிரியர்களுக்கு ஊதிய உயர்வு பெறவும் உரிமை இல்லை என்றும் சென்னை ஐகோர்ட் தெரிவித்துள்ளது.
 
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் அரசு கொண்டு வந்த ஆசிரியர் தகுதித் தேர்வில் அனைத்து ஆசிரியர்களும் தேர்ச்சி பெற வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நிலையில் இந்த உத்தரவுக்கு எதிர்ப்பு தெரிவித்து பதிவு செய்யப்பட்ட வழக்கில் தான் சென்னை ஐகோர்ட் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. 
 
 
அடுத்த கட்டுரையில்
ரூ.1 கோடி கொடுத்தால் தான் ஜாமின்: இலங்கை நீதிமன்றம் உத்தரவால் ராமேஸ்வரம் மீனவர்கள் அதிர்ச்சி