புதிய கல்விக்கொள்கையை வடிவமைக்க வல்லுநர்கள் குழு- முதல்வர் ஸ்டாலின் உத்தரவு
தமிழகத்தில் கடந்த ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தல் திமுக தலைமையிலான கூட்டணி பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றது. தற்போது மு.க.ஸ்டாலின் முதல்வராகப் பதவியேற்று ஆட்சி நடத்தி வருகிறார்.
திமுக ஆட்சிப் பொறுப்பேற்றது முதல் மக்களுக்கு பல்வேறு நடத்திட்டங்கள் அறிமுகப்படுத்தி வரும் நிலையில் இன்று முக்கிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
தமிழ் நாட்டின் புதிய கல்விக்கொள்கையை வடிவமைக்க வல்லுநர்கள் அடங்கிய மாநில அளவிலான குழு அமைத்து முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
குழுவின் தலைவராக டெல்லி உயர் நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி முருகேசன் நியமிக்கப்பட்டுள்ளார்.