திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: செவ்வாய், 5 ஏப்ரல் 2022 (20:21 IST)

நடிகை ரோஜாவின் கணவருக்கு பிடிவாரண்ட்- கோர்ட் உத்தரவு

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்கு நராக இருந்தவர் ஆர்.கே.செல்வமணி. இவருக்கு எதிராக  நீதிமன்றம் பிடிவாரண்ட் உத்தரவு பிறப்பித்துள்ளது.

பிரபல சினிமா இயக்கு நர் ஆர்.கே.செல்வமணி மற்றும் முன்னாள் எம்.எல்.ஏ அன்பரசு ஆகியோர் கடந்த 2016 ஆம் ஆண்டு ஒரு தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டு அளித்தனர். அதில், பைனான்சியர் முகுந்த் சந்த போத்ரா குறித்து  சில கருத்துகள் தெரிவித்தனர். இதையடுத்து போத்ரா இருவர் மீதும் சென்னை ஜார்ஜ் டவுன் கோர்ட்டில் அவதூறு வழக்கை தாக்கல் செய்தார்.

போத்ரா இறப்பிற்கு பின் அவரது மகன் இந்த வழக்கை நடத்து வரும் நிலையில்,  நேற்று இவ்வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது ஆர் .கே.செல்வமணி மற்றும் அன்பரசு இருவரும் ஆஜராகவில்லை. எனவீ இருவருக்கு எதிராக   ஜாமீனில் வெளிவரக்கூடிய பிடிவாரண்டு  பிறப்பித்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.