தொடர்புடைய செய்திகள்
- மதுபானங்களை பாட்டிலில் விற்கும்போது ஆவின் பாலை விற்க முடியாது? சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி
- அடுத்த 3 மணி நேரத்தில் சென்னை உள்பட 13 மாவட்டங்களில் மழை: வானிலை அறிவிப்பு..!
- IRCTC இணையதளம் சரி செய்யப்படும் வரை இதை செய்யுங்கள்: ரயில்வே நிர்வாகம் அறிவிப்பு..!
- ஒன்றுக்கும் மேற்பட்ட பாடங்களில் தேர்வு இல்லை என்றால் துணைத் தேர்வு இல்லை: சென்னை ஐகோர்ட்..!
- முடங்கியது IRCTC இணையதளம்: முன்பதிவு செய்ய முடியாமல் பயணிகள் அவதி..!
சென்னை- கும்மிடிப்பூண்டி புறநகர் ரயில் சேவை திடீர் நிறுத்தம்: என்ன காரணம்?
சென்னை சென்ட்ரல் முதல் கும்மிடிப்பூண்டி வரை செல்லும் புறநகர் ரயில் சேவை திடீரென நிறுத்தப்பட்டதால் பயணிகள் பெரும் அவதியில் இருப்பதாக கூறப்படுகிறது.
சென்னை புறநகர் ரயிலை தினந்தோறும் லட்சக்கணக்கான பொதுமக்கள் பயன்படுத்தி வருகின்றனர் என்பதும் காலையில் அலுவலகம் செல்பவர்கள் பள்ளி கல்லூரிகளுக்கு செல்பவர்களுக்கு புறநகர் ரயில் தான் உதவியாக உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் சென்னை கும்பிடிப்பூண்டி புறநகர் ரயில் சேவை இன்று காலை திடீரென நிறுத்தப்பட்டது. எண்ணூர் அருகே தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டுள்ளதாகவும் இதனை அடுத்து இந்த பகுதியில் மின்சார ரயில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும் ரயில்வே அதிகாரிகள் கூறியுள்ளனர்.
கடந்த ஒரு மணி நேரத்திற்கு மேலாக ரயில்கள் நிறுத்தப்பட்டுள்ளதால் பயணிகள் தங்கள் செல்லும் இடத்திற்கு செல்ல முடியாமல் கடும் அவதியில் உள்ளனர் என்றும் உடனடியாக பழுதை நீக்கி ரயிலை இயக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. மின்சார ரயில் நிறுத்தப்பட்டுள்ளதால் பேருந்துகளில் அதிக கூட்டம் உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
Edited by Siva
