வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : புதன், 26 ஜூலை 2023 (07:57 IST)

அடுத்த 3 மணி நேரத்தில் சென்னை உள்பட 13 மாவட்டங்களில் மழை: வானிலை அறிவிப்பு..!

அடுத்த மூன்று மணி நேரத்தில் சென்னை உள்பட 13 மாவட்டங்களில் மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது 
 
வங்க கடலில் தோன்றிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக சென்னை உள்பட பல பகுதிகளில் மழை பெய்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். 
 
சென்னையில் நேற்று விடிய விடிய சாரல் மழை பெய்தது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இன்னும் மூன்று மணி நேரத்தில் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், நீலகிரி, கோவை, கிருஷ்ணகிரி, தர்மபுரி, விழுப்புரம், வேலூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர் மற்றும் திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
 
 இன்னும் சில நாட்கள் தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்யும் என்று கூறப்பட்டுள்ளது.
 
Edited by Siva