திங்கள், 6 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : செவ்வாய், 25 ஜூலை 2023 (15:33 IST)

ஒன்றுக்கும் மேற்பட்ட பாடங்களில் தேர்வு இல்லை என்றால் துணைத் தேர்வு இல்லை: சென்னை ஐகோர்ட்..!

கேந்திரியா வித்யாலயா பள்ளிகளில் பதினோராம் வகுப்பு தேர்வில் ஒன்றுக்கு மேற்பட்ட பாடங்களில் மாணவர்கள் தோல்வி அடைந்தால் துணை தேர்வை நடத்த வேண்டும் என்ற தனி நீதிபதி உத்தரவை சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்துள்ளது 
 
 இதனை அடுத்து ஒன்றுக்கும் மேற்பட்ட பாடங்களில் தோல்வி அடையும் மாணவர்கள் துணைத் தேர்வு எழுத அனுமதிக்கப்பட மாட்டாது என்று தெரியவந்துள்ளது. 
 
இதுகுறித்து மாணவன் கொடுத்த வழக்கு ஒன்றில் ஒரு பாடத்தில் தோல்வி அடைந்தவர்களுக்கும் ஒன்றுக்கும் மேற்பட்ட பாடங்களில் தோல்வி அடைந்தவர்களுக்கும் பள்ளி நிர்வாகம் பாரபட்சம் காட்டுவதாக வாதம் செய்யப்பட்டது 
இதனை அடுத்து ஒன்றுக்கு மேற்பட்ட பாடங்களில் தோல்வி அடையும் மாணவர்களுக்கு துணைத் தேர்வு எழுதுவதற்கு அனுமதிக்குமாறு தனிநீதிபதி உத்தரவிட்டார் 
 
ஆனால் இந்த உத்தரவு இந்த வழக்கிற்கு பொருந்தாது என்று மேல்முறையீடு செய்யப்பட்ட நிலையில் சென்னை உயர்நீதிமன்றம் ஒன்றுக்கும் மேற்பட்ட பாடங்களில் தோல்வி அடைந்தவர்களுக்கு துணைத்தேர்வு எழுதுவதற்கு அனுமதி இல்லை என்று விதி இருப்பதால்  தனி நீதிபதி தீர்ப்பை ரத்து செய்வதாக அறிவித்துள்ளார்
 
Edited by Siva