1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: செவ்வாய், 25 ஜூலை 2023 (16:25 IST)

IRCTC இணையதளம் சரி செய்யப்படும் வரை இதை செய்யுங்கள்: ரயில்வே நிர்வாகம் அறிவிப்பு..!

இன்று காலை முதல் IRCTC இணையதளம் முடங்கி இருப்பதை அடுத்து முன்பதிவு செய்ய முடியாமல் ரயில் பயணிகள் தவிர்த்து வருகின்றனர். தொழில்நுட்ப கோளாறு காரணமாக IRCTC இணையதளம் பிரச்சனையில் இருப்பதாகவும் அதுவரை   Make my trip, Amazon போன்ற இணையதளங்கள் மற்றும் செயலிகள் மூலம் பயணிகள் டிக்கெட் முன்பதிவு செய்து கொள்ளலாம் என ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.
 
இது குறித்து தனது IRCTC தனது பக்கத்தில் தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. தொழில்நுட்ப கொளாறு காரணமாக தற்காலிகமாக IRCTC இணையதளம் முடக்கப்பட்டுள்ளதாகவும் அதனை சரி செய்யும் பணிகள் நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது. 
 
மேலும் அனைத்து முக்கிய ரயில் நிலையங்களிலும் கூடுதல் கவுண்டர்கள் முன்பதிவு செய்வதற்கு திறக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளன
 
Edited by Mahendran