திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : ஞாயிறு, 19 மார்ச் 2023 (11:04 IST)

மதுபோதையில் பேருந்தை வழிமறித்த இளம்பெண்.. மறுநாளே 4வது மாடியில் இருந்து குதித்ததால் அதிர்ச்சி..!

சென்னையில் மது போதையில் இளம் பெண்கள் ஆறு பேர் நேற்று பேருந்தை வழிமறித்து கலாட்டா செய்த நிலையில் அவர்களில் ஒரு பெண் இன்று நான்காவது மாடியிலிருந்து கீழே குதித்து படுதாயம் அடைந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சென்னை வாலாஜா சாலையில் நேற்று 6 பெண்கள் குடிபோதையில் பேருந்தை வழிமறித்த சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது. இவர்களில் மூன்று பேர்களை போலீசார் கைது செய்த நிலையில் மீதமுள்ள மூன்று பேர்களை ஆஜராக போலீசார் உத்தரவு பிறப்பித்து இருந்தனர்.
 
இந்த நிலையில் இந்த மூன்று பெண்களில் ஒருவரான சோனாலி என்ற இளம் பெண் நேற்று இரவு காதலனுடன் மீண்டும் மது அருந்திய நிலையில் திடீரென நான்காவது மாடியில் இருந்து குதித்து குதித்துள்ளார்
 
இதனால் அவரது இடுப்பு கை கால்கள் முறிந்து அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன. காதலனுடன் ஏற்பட்ட தகராறு மற்றும் போலீசாரின் விசாரணை ஆகியோவை காரணமாக அவர் மன விரக்தியில் மாடியில் இருந்து குதித்திருக்கலாம் என்று கூறப்படுகிறது
 
Edited by Siva