1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated: ஞாயிறு, 19 மார்ச் 2023 (08:44 IST)

இன்னும் சிறிது நேரத்தில் சென்னை உள்பட 10 மாவட்டங்களில் மழை: வானிலை அறிவிப்பு..!

இன்னும் சில மணி நேரத்தில் சென்னை உள்பட தமிழகத்தில் உள்ள 10 மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இன்னும் சில தினங்களில் கோடை வெயில் தொடங்க இருக்கும் நிலையில் கடந்த சில நாட்களாக தமிழகத்தில் மழை பெய்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். அந்த வகையில் நேற்று சென்னையில் மிதமான மழை பெய்த நிலையில் இன்று சென்னை உள்பட 10 மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
 
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை, தஞ்சை, திருவாரூர், ராமநாதபுரம்  ஆகிய பத்து மாவட்டங்களில் இன்னும் இரண்டு மணி நேரங்களில் மழை பெய்யும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது 
 
கடந்த சில நாட்களாக கோடை வெயில் கொளுத்தி வந்த நிலையில் கடந்த இரண்டு நாட்களாக வானிலை குளிர்ச்சியாக இருப்பதை அடுத்து பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேலும் தமிழக முழுவதும் இன்னும் நான்கு நாட்களுக்கு மழை பெய்யும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
 
Edited by Siva