வெள்ளி, 31 மார்ச் 2023
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified சனி, 18 மார்ச் 2023 (10:54 IST)

சென்னை உள்பட 13 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழை: வானிலை அறிவிப்பு..!

சென்னை உள்பட 13 மாவட்டங்களில் அடுத்த மூன்று மணி நேரத்தில் மிதமான மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கோடை வெயில் தொடங்க இருக்கும் நிலையில் தற்போது தமிழகத்தில் மழை பெய்து வருகிறது என்பதும் குறிப்பாக சென்னையில் நேற்று ஆலங்கட்டி மழை பெய்தது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இன்னும் மூன்று மணி நேரத்தில் சென்னை உள்பட 13 மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 
 
சென்னை, திருவள்ளூர், கடலூர், தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருநெல்வேலி, தென்காசி, விழுப்புரம், செங்கல்பட்டு உள்ளிட்ட 13 மாவட்டங்களில் அடுத்த மூன்று மணி நேரத்தில் லேசான மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது 
 
கோடை வெயில் கொளுத்தி கொண்டிருக்கும் நிலையில் ஆங்காங்கே மழை பெய்வது பொது மக்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
 
Edited by Mahendran