வியாழன், 30 மார்ச் 2023
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified சனி, 18 மார்ச் 2023 (17:31 IST)

சென்னையில் மதுபோதையில் ரகளையில் ஈடுபட்ட இளம் பெண்கள்! போலீசை பார்த்ததும் ஓட்டம்.,.!

சென்னையில் மது போதையில் பெண்கள் சிலர் வாலாஜா சாலையில் பெருந்தை மறித்து அராஜகத்தில் ஈடுபட்ட நிலையில் போலீசாரை பார்த்ததும் பயந்து தப்பி ஓடிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
ஆண்கள் தான் மது போதையில் பேருந்துகளை நிறுத்தி ரகளையில் ஈடுபடும் சம்பவங்கள் நடந்து கொண்டிருக்கும் நிலையில் இளம் பெண்கள் சென்னை வாலாஜா சாலையில்  மது போதையில் பேருந்தை வழிமறித்த சம்பவம் அந்த பேருந்தில் பயணம் செய்த பயணிகளுக்கும் டிரைவர் மற்றும் கண்டக்டருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 
 
ஆறு இளம்பெண்கள் அந்த பேருந்தை மது போதையில் வழிமறித்து கலாட்டா செய்தது அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் அந்த பகுதி காவலர்களுக்கு இந்த தகவல் தெரிந்து விரைந்து வந்த போது அதில் மூன்று பெண்கள் தப்பி ஓடி விட்டதாகவும் மூன்று பெண்கள் போலீசாரிடம் பிடிபட்டதாகவும் தெரிகிறது. இதனை அடுத்து ரகளையில் ஈடுபட்ட பெண்கள் மீது இரண்டு பிரிவுகளில் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்
 
மது போதையில் பெண்கள் சாலையில் இறங்கி அராஜகத்தில் ஈடுபட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
Edited by Mahendran