1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. chennai corporation plan for coovam river

கூவம் நதியை மீட்டெடுக்கும் திட்டம்: புத்துயிர் கொடுக்கும் சென்னை மாநகராட்சி!

கூவம் நதி
கூவம் நதியை மீட்டெடுக்கும் திட்டத்திற்கு  சென்னை மாநகராட்சி மீண்டும் புத்துயிர் கொடுத்துள்ளது.
 
கடந்த 2006-2011 திமுக ஆட்சியில் துணை முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் இருந்தபோது கூவம் நதியை சீரமைத்து மீட்டெடுக்க, சென்னை நதிகள் சீரமைப்பு அறக்கட்டளை ஒப்பந்தம் கையெழுத்திட்டது. அப்போதைய மேயர் சுப்பிரமணியன் முயற்சியில் அமெரிக்க சான் ஆண்டனியோ மாகாணத்துடன் சென்னை மாநகராட்சி நீர்நிலைகள் மீட்டெடுத்தல் தொடர்பாக சகோதர ஒப்பந்தமும் கையெழுத்தானது.
 
அதன்பின்னர் அதிமுக ஆட்சிக் காலத்தில் இவை அனைத்தும் கிடப்பில் போடப்பட்டன. இந்நிலையில் கடந்த ஜூலை மாதம் சான் ஆன்டனியோ மகாணத்துக்குச் சென்ற மேயர் பிரியா சகோதர ஒப்பந்தத்தை புதுப்பித்து, பின்னர் சென்னை மாநகராட்சியுடன் திட்டங்கள் பரிமாறிக்கொள்ளவும் முடிவெடுக்கப்பட்டது.
 
இதில், சான் ஆன்டனியோவில் உள்ள நதியை மீட்டெடுத்து சுற்றுலா தளமாக மாற்றியதை போல சென்னை கூவம் நதியை சீரமைக்க ஆய்வு செய்து அறிக்கை வழங்கவும் கோரிக்கை விடுக்கப்பட்டது. 
 
இது தொடர்பாக, சர்வதேச சுற்றுச்சூழல் மேம்பாடு மற்றும் அறிவியல் விவரங்களுக்கான அமெரிக்க வெளியுறவுத்துறை துணை அமைச்சர் ஜெனிபர் லிட்டில் ஜான், அமெரிக்க துணை தூதர் கிறிஸ் ஹொட்ஜாஸ் உள்ளிட்ட அமெரிக்க பிரதிநிதிகள் சென்னை வந்துள்ளனர்.
 
மேயர் பிரியா மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் ரிப்பன் மாளிகையில் சந்தித்து ஆலோசனை மேற்கொண்டனர். தொடர்ந்து கூட்டாக இணைந்து கூவம் நதியை நேரில் பார்வையிட்டனர்.
 
இதனை தொடர்ந்து, முதலமைச்சரின் கனவுத் திட்டமான கூவம் நதி மீட்டெடுத்தல் உள்ளிட்ட சென்னையின் முக்கிய நீர்நிலைகளை சீரமைத்து மீட்டெடுப்பதற்கான சாத்தியக்கூறுகள் மற்றும் திட்ட அறிக்கை தயாரிக்கவும் சென்னை மாநகராட்சி திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
 
Edited by Mahendran
About Writer
Mahendran
அடுத்த கட்டுரையில்
நான் சாகப்போகிறேன் என சிவராமன் எனக்கு கடிதம் எழுதியிருந்தார்: சீமான்