ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Senthil Velan
Last Updated : வெள்ளி, 23 ஆகஸ்ட் 2024 (13:11 IST)

சென்னையில் 245 பள்ளிகளில் சிசிடிவி கேமராக்கள்.! மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய மாநகராட்சி அதிரடி..!

cctv camera
பள்ளி மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் சென்னை மாநகராட்சி சார்பில் ரூ.6.50 கோடியில் 245 பள்ளிகளில் சிசிடிவி கேமராக்கள் பொருத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.

சென்னை மாநகராட்சி கல்வித்துறை சார்பில் 206 தொடக்கப் பள்ளிகள், 130 நடுநிலைப் பள்ளிகள், 46 உயர்நிலைப் பள்ளிகள், 35 மேல்நிலைப் பள்ளிகள் என மொத்தம் 417 பள்ளிகள் இயங்கி வருகின்றன.  இவற்றில் உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில், மாணவிகளின் பாதுகாப்புக்காக ஏற்கெனவே நிர்பயா திட்டத்தின் கீழ் சிசிவிடி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.
 
திருவான்மீயூர் பகுதியில் உள்ள நடுநிலைப் பள்ளி மாணவி ஒருவரை இளைஞர் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்தது தெரியவந்தது. இதை தொடர்ந்து மாணவ, மாணவிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய மாநகராட்சியின் அனைத்து பள்ளிகளிலும் சிசிடிவி கேமரா நிறுவப்படும் என்று மாநகராட்சி மேயர் பிரியா ஏற்கனவே அறிவித்திருந்தார்.

 
அந்த அறிவிப்பை செயல்படுத்தும் விதமாக மாநகராட்சி சார்பில் ரூ.6.50 கோடியில் 245 பள்ளிகளில் சிசிடிவி கேமரா பொருத்த டெண்டர் கோரப்பட்டுள்ளது. டெண்டர் பணிகள் இம்மாத இறுதிக்குள் முடிந்து, அடுத்த ஓரிரு மாதங்களில் சிசிடிவி கேமராக்கள், பள்ளிகளில் பொருத்தப்படும் என்று மாநகராட்சி அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.