1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: வெள்ளி, 23 ஆகஸ்ட் 2024 (10:39 IST)

கொடியில் சட்டமீறல்: தவெக விஜய் மீது சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார்

Vijay Flag
தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் நடிகர் விஜய் சட்டத்துக்கு புறம்பான முறையில் கொடி ஏற்றியதாக சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

நடிகர் விஜய் தனது நேற்று தனது தமிழக வெற்றி கழகத்தின் கொடியை அறிமுகம் செய்து ஏற்றிய நிலையில் அந்த கொடி குறித்த செய்திகள் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் தமிழக வெற்றி கழகத்தின் கோடியில் தேர்தல் விதிமுறைகள் மற்றும் சட்டத்துக்கு புறம்பான சின்னங்கள் இருப்பதாக சென்னை சேர்ந்த ஆர்டிஐ செல்வம் என்பவர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.

கேரளா அரசு போக்குவரத்து சின்னமான யானை தமிழக வெற்றி கழகத்தின் சின்னமாக இருப்பதாகவும், ஸ்பெயின் நாட்டை அவமதிக்கும் வகையில் அந்நாட்டு தேசியக்கொடி போன்று அமைந்துள்ளதாகவும் அவர் தனது புகார் மனுவில் தெரிவித்துள்ளார்.

இதனை அடுத்து நடிகர் விஜய் மீது தேச குற்ற வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்றும் அவர் தனது புகார் மனுவில் கோரிக்கை விடுத்துள்ளார். இந்த புகாரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Edited by Mahendran