1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Chennai buses today normal

சென்னையில் இன்று வழக்கம்போல பேருந்துகள் இயங்கும்: தொமுச அறிவிப்பு

சென்னை
சென்னையில் இன்று வழக்கம் போல் பேருந்துகள் இயங்கும் என தொமுச அறிவிப்பு செய்துள்ளது. 
 
நாடு முழுவதும் மத்திய அரசை எதிர்த்து பாரத் பந்த் நடத்தப்பட்டு வரும் நிலையில் நேற்று சென்னையில் சுமார் 60% பேருந்துகள் இயங்கவில்லை
 
இதனால் பயணிகள் மின்சார ரயில்கள் மெட்ரோ ரயில் மற்றும் ஆட்டோ ஷேர் ஆட்டோக்களில் பயணம் செய்தனர் 
 
இந்த நிலையில் இன்று 60% பேருந்துகள் இயங்கும் என தொமுச ஏற்கனவே அறிவித்த நிலையில் தற்போது சென்னையில் இன்று வழக்கம் போல் பேருந்துகள் இயங்கும் என தொமுச அறிவித்துள்ளது. இதனால் பொதுமக்கள் நிம்மதி அடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
 
About Writer
siva
அடுத்த கட்டுரையில்
இலங்கை அமைச்சர் தேவானந்தாவுடன் பேச்சுவார்த்தை: தமிழில் டுவிட் செய்த ஜெயசங்கர்!