1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. police warning to auto drivers

ஆட்டோக்களில் அதிக கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை: சென்னை போலீஸ் எச்சரிக்கை!

சென்னை
ஆட்டோக்களில் அதிக கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை மாநகர போலீஸ் எச்சரிக்கை விடுத்துள்ளது. 
 
இன்றும் நாளையும் போக்குவரத்து துறையினர் வேலைநிறுத்தம் செய்வதன் காரணமாக ஆட்டோக்களில் இரு மடங்கு கட்டணம் வசூலிக்கப்படுவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர் 
 
இந்த நிலையில் பொது வேலை நிறுத்தத்தை பயன்படுத்தி ஆட்டோ மற்றும் ஷேர் ஆட்டோக்களில் அதிக கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை மாநகர காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது
 
சென்னையில் அதிக கட்டணம் வசூலித்த ஆட்டோ ஓட்டுநர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது
அடுத்த கட்டுரையில்
அதிகாரிகள் பேச்சுவார்த்தை எதிரொலி: சிறுவனின் உடலை பெற்று கொண்ட பெற்றோர்!