1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Chennai buses are usually run says managing director

சென்னை மாநகரில் கூடுதல் பேருந்துகள்.. 112% வரை மாநகர பேருந்துகள் இயக்கம்..!

transport
சென்னை மாநகரில் கூடுதல் பேருந்துகள் இயக்கப்படுவதாகவும் வழக்கத்தைவிட 112 சதவீதம் மாநகர பேருந்துகள் இயக்கப்பட்டு வருவதாகவும் சென்னை மாநகர போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது.

ஊதிய உயர்வு ,அகவிலைப்படியை சரியான தேதியில் தர வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போக்குவரத்து ஊழியர்கள் நேற்று முதல் வேலை நிறுத்தம் செய்து வருகின்றனர்.

இந்த வேலை நிறுத்தம் காரணமாக சென்னை உள்பட தமிழகத்தில் உள்ள பல பகுதிகளில் பேருந்துகள் குறைவாக இயக்கப்பட்டு வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

இந்த நிலையில் சென்னை மாநகரில் வழக்கம் போல் பேருந்துகள் இயங்குவதாகவும் வழக்கத்தைவிட 112 சதவீதம் அதிக பேருந்துகள் இயக்கப்பட்டு வருவதாகவும் சென்னை மாநகர பேருந்து மேலாண் இயக்குனர் தெரிவித்துள்ளார். இந்த நிலையில் போக்குவரத்து ஊழியர்களின் போராட்டம் இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது

Edited by Siva
About Writer
Siva
அடுத்த கட்டுரையில்
காலை 10 மணி வரை 5 மாவட்டங்களில் மழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம்..!