1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. non experience driver drive bus at salem

அனுபவமற்ற ஓட்டுனரால் நடுவழியில் நின்ற பேருந்துகள்: பயணிகள் பெரும் அவதி..!

பேருந்து
போக்குவரத்து ஊழியர்கள் வேலை நிறுத்தம் செய்யும் காரணத்தினால் அனுபவமற்ற ஊழியர்களை அரசு நியமனம் செய்து பேருந்துகளை இயக்கி வருகிறது. இந்த நிலையில் சேலத்தில் அனுபவமற்ற ஓட்டுனர் ஒருவர் இயக்கிய பேருந்து திடீரென நடுவழியில் நின்றதால் அதில் பயணம் செய்த பயணிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். 
 
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போக்குவரத்து ஊழியர்கள் இன்று முதல் தொடர் போராட்டத்தை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் அமைச்சர் சிவசங்கர் அறிவுரையின்படி தற்காலிக ஓட்டுநர்கள் நியமனம் செய்யப்பட்டு அவர்களை வைத்து பேருந்துகள் ஒட்டப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

 
 இந்த நிலையில் சேலம் அருகே அனுபவமற்ற ஓட்டுனர் ஒருவர் இயக்கிய பேருந்து திடீரென நடுவழியில் நின்றதை அடுத்து அந்த பேருந்து பயணிகள் உதவியுடன் தள்ளிக் கொண்டே செல்லப்பட்டது. 
 
அனுபவமற்ற ஓட்டுநர் எவ்வளவு முயன்றும் அந்தப் பேருந்தை அவரால் இயக்க முடியவில்லை. இதனால் பயணிகள் வெறுப்படைந்து வேறு பேருந்துகளை நோக்கி சென்றனர். அனுபவமற்ற ஓட்டுனரால் அந்த பேருந்தில் பயணம் செய்த பயணிகளுக்கு பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது
 
Edited by Mahendran
About Writer
Mahendran
அடுத்த கட்டுரையில்
ரயில்வே வேலைக்கு நிலம்.! லாலுவின் மனைவி, மகள் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்..!!