1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: செவ்வாய், 9 ஜனவரி 2024 (17:13 IST)

தமிழகத்தில் முதலீடு ஈர்ப்பு குஜராத்தை விட குறைவு- அண்ணாமலை

Annamalai
சென்னை- நந்தனம்பாக்கத்தில் உள்ள வர்த்தகக் மையத்தில்  கடந்த  ஜனவரி 7, மற்றும் 8 ஆகிய தேதிகளில்   முதல் உலக முதலீட்டாளர்கள்  மாநாடு நடைபெற்றது.
 
இதில், பல்வேறு நாடுகளைச் சேர்ந்த முதலீட்டாளர்கள் தமிழகத்தில் பல ஆயிரம் கோடியில் முதலீடு செய்து, அரசுடன்  புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளதுடன், இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகள் அளிக்கவுள்ளதாக அறிவித்னர்.

இந்த நிலையில்,  தமிழ்நாடு உலக முதலீட்டாளர்கள் மா நாட்டில் முதல்வர் மு.க.ஸ்டாலின் இரண்டு நாள் உலக முதலீட்டாளர்ககள் மா நாட்டில் ரூ.6.64 லட்சம் கோடிக்கு முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ள நிலையில், இதன் மூலம் 26லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது என்று இந்த மாநாட்டில் நிறைவு விழாவில் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் முதலீடு ஈர்ப்பு குஜராத்தை விட குறைவுதான் என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளதாவது:

முதலீட்டில் தமிழக அரசு  இன்னும் அதிக இலக்கை நிர்ணயித்து செயல்பட வேண்டும். உலக முதலீட்டாளர்கள் மாநாட்டின் இலக்கு ரூ.10 லட்சம் கோடியாக இருந்திருக்க வேண்டும். குஜராத் கடந்த 3 நாட்களில் மட்டும் ரூ.7 லட்சம் கோடி முதலீடுகளை  ஈர்த்துள்ளது. அதிக வருவாய் ஈட்டிய மாநிலங்கள் பட்டியலில் தமிழகம் 5வது இடத்தில் உள்ளது. முதலீடுகளை ஈர்ப்பதிலும் நாம் செல்ல வேண்டிய தூரம் இன்னும் அதிகம் உள்ளது என்று தெரிவித்துள்ளார்.