புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: புதன், 2 மார்ச் 2022 (16:27 IST)

என்ன சொல்லி பதவியேற்றார் பாஜாவின் ஒரே ஒரு சென்னை கவுன்சிலர் உமா ஆனந்தன்?

என்ன சொல்லி பதவியேற்றார் பாஜாவின் ஒரே ஒரு சென்னை கவுன்சிலர் உமா ஆனந்தன்?
சென்னை உள்பட தமிழகம் முழுவதும் சமீபத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது என்பதும் இந்த தேர்தலின் முடிவுகள் வெளியானபோது திமுக அமோக இடங்களில் வெற்றி பெற்றது என்பதும் தெரிந்ததே. 
 
குறிப்பாக சென்னை மாநகராட்சி தேர்தலில் திமுகவின் கவுன்சிலர்கள் பலர் வெற்றி பெற்றனர். ஆனால் சென்னையில் பாஜக சார்பில் வெற்றி பெற்ற ஒரே ஒரு கவுன்சிலர் உமா ஆனந்தன் வெற்றி பெற்றார் என்பது தெரிந்ததே.
 
 இவர் முதலில் 8 வாக்குகள் மட்டுமே பெற்று தோல்வி அடைந்தார் என்று வதந்திகள் பரவிய நிலையில் அதன்பின் வெற்றிபெற்றார் என அறிவிக்கப்பட்டது
 
இந்த நிலையில் இன்று பதவியேற்றபோது பாஜக கவுன்சிலர் உமா ஆனந்தன், ‘நான் தெய்வ அனுக்கிரகத்தால் வெற்றி பெற்றுள்ளேன் என்றும் நான் நித்தம் வணங்கும் தில்லை அம்பலத்தானுக்கு கோடி நமஸ்காரம் என்றும் கூறி பதவி ஏற்றார்