புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : புதன், 2 மார்ச் 2022 (07:38 IST)

வார்டு கவுன்சிலர்கள் இன்று பதவியேற்பு: நாளை மறுநாள் மேயர் தேர்தல்!

சமீபத்தில் நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்ற கவுன்சிலர்கள் இன்று பதவி ஏற்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
 
கடந்த சில நாட்களுக்கு முன்னர் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது என்பதும் இந்த தேர்தலில் திமுக பெரும்பாலான தொகுதிகளில் வெற்றி பெற்றது என்பதும் குறிப்பிடத்தக்கது. 
 
இந்த நிலையில் தமிழ் நாட்டில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வெற்றிபெற்ற மாநகராட்சி நகராட்சி மற்றும் பேரூராட்சி வார்டு கவுன்சிலர்கள் இன்று பதவியேற்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து வெற்றி பெற்ற கவுன்சிலர்கள் பதவி ஏற்க தயாராகி வருகின்றனர். 
 
மேலும் மேயர் மற்றும் மாநகராட்சி தலைவருக்கான மறைமுக தேர்தல் நாளை மறுதினம் அதாவது மார்ச் 4ஆம் தேதி நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.