ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva

கோவையில் மட்டும் 85 பாஜக வேட்பாளர்கள் டெபாசிட் இழப்பு!

நடைபெற்று முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் கோவை தங்களுடைய கோட்டை என்று கூறிக் கொண்டிருந்த பாஜக மற்றும் அதிமுகவினர் டெபாசிட் இழந்த தகவல் தற்போது வெளிவந்துள்ளது. கோவை மாநகராட்சியின் முடிவுகள் குறித்து தற்போது பார்ப்போம். 
 
கோவை மாநகராட்சியின் 100 வார்டுகளுக்கு 778 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். மொத்தம், 15 லட்சத்து, 65 ஆயிரத்து, 158 வாக்காளர்களில், தி.மு.க., வேட்பாளர்கள் மட்டும், 3 லட்சத்து, 88 ஆயிரத்து, 642 ஓட்டுகளும், அ.தி.மு.க., வேட்பாளர்கள், 2 லட்சத்து, 13 ஆயிரத்து, 643 ஓட்டுகளும், பா.ஜ., வேட்பாளர்கள், 72 ஆயிரத்து, 393 ஓட்டுகளும், பெற்றுள்ளனர்.
 
அ.தி.மு.க., வேட்பாளர்களில், 21 பேர்கள், பா.ஜ., - 85 பேர்கள்,, ம.நீ.ம 93 பேர்கள்,  நாம் தமிழர் - 83 பேர்கள்,  அ.ம.மு.க., - 71 பேர்கள்,  தே.மு.தி.க பேர்கள் டெபாசிட்' இழந்திருக்கின்றனர். 14 வேட்பாளர்கள், ஒற்றை இலக்கத்தில் ஓட்டு பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.